'தேர்தல் செலவு நெருக்கடியால் திமுகவில் இணைந்தார்'

'தேர்தல் செலவு நெருக்கடியால் திமுகவில் இணைந்தார்'

1 mins read

சென்னை: கொடுக்ககொடுக்க ஒரு நிறைவின்றி மேலும் மேலும் முளைத்துக் கொண்டிருக்கும் தேர்தல் செலவு நெருக்கடி காரண மாகவே அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அமமுக செயலருமான செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமமுக சார்பில் மண்டல வாரியாக நடந்த பொதுக்கூட்டம், மாவட்ட வாரியாக நடந்த ஆர்ப் பாட்டம், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் என செந்தில் பாலாஜி கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காலியாக உள்ள 20 தொகுதி களுக்கும் இடைத்தேர்தல் அறி விக்கப்பட்டால் 10 தொகுதிகளுக் கான தேர்தல் செலவை ஏற்கும்படி செந்தில் பாலாஜிக்கு தினகரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே தினகரனுக்காக வும் கட்சிக்காகவும் செந்தில் பாலாஜி நிறைய செலவுசெய்து நொந்து போயிருந்தவர், இதனால் கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்கவும் செந்தில் பாலாஜிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒருசிலருக்கு மட்டும் அமமுகவில் முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.