அனுமதி மறுப்பு; பாஜக தவிப்பு

அனுமதி மறுப்பு; பாஜக தவிப்பு

2 mins read

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா தலைமையில் திரிணாமுல் காங் கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வரு கிறது. இங்கு பாரதிய ஜனதா கட்சியினர் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இந்த ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க மம்தா அரசு மறுத்துவிட்டது. பாஜக ரத யாத்திரையின்போது மத கலவரத்தை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதால் அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் திலீப் கோ‌ஷிற்கு மேற்கு வங்க அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் யாத்திரைக்கு எங் களால் அனுமதி அளிக்க முடி யாது. ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரி‌ஷித் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் சில யாத்திரையில் பங்கேற்கின்றன.

இதனை காரணமாக வைத்து யாத்திரையின்போதும் அதற்கு பிறகும் பல மாவட்டங்களில் கல வரத்தை ஏற்படுத்த சிலர் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது எனக் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பேசிய பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, திரிணாமுல் காங் கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க அரசின் இந்த செயல் ஜன நாயக விரோதமானது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறை யிடுவோம்," என்று கூறினார். ஏற்கெனவே பாஜக முறை யீட்டை தனி நீதிபதி தபாபிதா சக்ரவர்த்தி நிராகரித்துவிட்ட நிலையில் கோல்கத்தா உயர் நீதி மன்றத்தை அணுக பாஜக முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி மேற்கு வங்கத்தின் மூன்று பகுதிகளில் ரத யாத்திரை நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு வருகிறது.