பெதாய் புயல் காரணமாக சென்னை, நாகையில் மழை

பெதாய் புயல் காரணமாக சென்னை, நாகையில் மழை

1 mins read

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல் காரணமாக சென்னை, நாகப்பட்டினத்தில் நேற்று காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப் பட்டது. சென்னையில் காசிமேடு, திருவொற்றியூர், எண்யூர் உள் ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அதுபோன்று நாகை மாவட் டம் வேதாரண்யம், ஆறுகாட்டுத் துறை, புஷ்பவனம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பகுதி களிலும் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக தென் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீன வர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"தென்கிழக்கு வங்கக் கட லில் உருவாகியுள்ள பெதாய் புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறவுள்ளது. இது ஆந்திரக் கடலோரம் மசூலிப்பட் டினம்-காக்கிநாடா இடையே இன்று பிற்பகல் கரையைக் கடக்கும்," என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத் தைச் சேர்ந்த ஏனம் மாவட்டமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக ஆந்திரா- புதுச்சேரி மாநிலங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. ஆந்திராவில் இன்று கரை யைக் கடக்க உள்ள பெதாய் புய லால் கோதாவரி, விசாகப்பட்டி னம், கிருஷ்ணா, குண்டூர் மாவட் டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாகவும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.