மதுக்கூட ஊழியர்களிடம் ரூ.3.5 லட்சம் கொள்ளை

மதுக்கூட ஊழியர்களிடம் ரூ.3.5 லட்சம் கொள்ளை

1 mins read

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மதுக்கூட ஊழியர்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுத் தாக்கி, அவர்களிடம் இருந்த மூன்றரை லட்சம் பணத்தை வம்படியாகக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஊத்தங்கரை, காட்டேரி கிரா மத்தின் அருகே உள்ள வனப் பகுதியை ஒட்டி அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. அந்தக் கடையில் பணிபுரியும் முருகன், ஆனந்தன் ஆகியோர் மூன்றரை லட்சம் ரூபாய் பணத் துடன் நேற்று முன்தினம் இரவு தாங்கள் தங்கியுள்ள அனுமன் தீர்த்தம் என்ற இடத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

காட்டேரி அருகே அடர்ந்த காட்டுப்பகுதிக்கு மத்தியில் அவர்கள் சென்றபோது முகமூடி அணிந்த இரு மர்மநபர்கள் தாங் கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் முருகனையும் ஆனந்தனையும் சுட்டுவிட்டுப் பணத்துடன் தப்பியோடினர். பலத்த காயம் அடந்த ஆனந் தனும் முருகனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, மற்றொரு சம்பவம் ஒன்றில் கோவை துடியலூர் மதுபானக் கடையில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கின் தொடர் பில், ஆயுள் தண்டனை பெற்ற நான்கு கைதிகள் மேல்முறையீடு செய்ததன் தொடர்பில் அவர் களை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.