ஸ்டெர்லைட்டைத் திறக்க தமிழக முதல்வர் முதல் பொதுமக்கள் வரை எதிர்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர் லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறப்பதற்கு தேசிய பசு மைத் தீர்ப்பாயம் அனுமதி அளித் துள்ளது. இதற்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரையிலான பலதரப் பட்ட மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "இந்த ஸ்டெர்லைட் உருக்கு ஆலை உண்மையிலேயே திறக்கப் படும்பட்சத்தில் முன்பு நடத்தியது போலவே மீண்டும் பெரும் போராட் டம் வெடிக்கும்," என்று எதிர்ப் பாளர்கள் எச்சரித்துள்ளனர். பசுமைத் தீர்ப்பாயம் அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய் யும் என்று மாநில முதல்வர் எடப் பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"பசுமைத் தீர்ப்பாயம் அளித் திருக்கும் 40 பக்கத் தீர்ப்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அர சின் கன்னத்தில் ஓங்கிவிடப்பட்ட அறையாகவே அமைந்திருக்கிறது. ஆகவே, இனியாவது பழனிசாமி தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்," என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதேபோல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோரும் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர் கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகை யில், "ஆலையைத் திறந்தால் மீண்டும் அறவழிப் போராட்டம் நடத்தப்படும்," என்று கூறினார். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் வேல் ராஜ் கூறும்போது, "இந்தத் தீர்ப் பால் இறந்த நபர்களின் குடும்பத் தினரை எப்படி தேற்றுவது? இது வேதனை தருகிறது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!