சென்னை: குட்கா போதைப் பாக்கு முறைகேடு வழக்கு தொடர்பாக மூன்றாவது நாளாக சிபிஐ விசார ணைக்கு நேற்று முன்னிலையானார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், விஜயபாஸ்கர் எப் போது வருகிறார்? எப்போது திரும் பிச் செல்கிறார்? என்பது தெரி யாமல் பரம ரகசியமாக உள்ளது. தொடர்ந்து, இன்றும் மூன் றாவது நாளாக அவரிடம் விசா ரணை நடைபெற்றது. குட்கா வழக்கில் பிடி இறுகு வதால் விஜயபாஸ்கருக்குக் கூடு தல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்கு முன்னிலை யாவதற்கு முன் முதல்வர் எடப் பாடி பழனிசாமியை திடீரென்று சந்தித்துள்ளார் விஜயபாஸ்கர். அவருடன் ஆலோசனையில் ஈடு பட்டு வருவதாகத் தெரிகிறது. இரண்டு நாள் விசாரணைக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. குட்கா முறைகேடு புகாரில் சிபிஐ அழைப்பாணை அனுப்பி, விசாரணைக்கு முன்னிலையாகி விளக்கம் அளித்து வரும் நிலையில் விஜயபாஸ்கர் இன்று முதல்வரை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குட்கா ஊழல் விசாரணைக்காக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச் சர் ரமணா ஆகியோர் நுங்கம் பாக்கத்தில் உள்ள சிபிஐ அலு வலகத்தில் முன்னிலையானார் கள்.
அமைச்சர் ரமணா முன்வாசல் வழியாகவே வந்து செல்கிறார். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு வந்து செல்வது என்பது தெரியாமலேயே இருந்தது. அவரைப் படம் பிடிப்பதற்காக சிபிஐ அலுவலக வாசலில் பத் திரிகை புகைப்படக் கலைஞர் களும் காணொளி புகைப்படக் காரர்களும் காத்துக்கிடந்தனர். ஆனால் கடந்த இரு நாட்களாக நடந்த விசாரணைக்கும் முன் வாசல் வழியே அவர் வரவில்லை. வாடகைக் காரில் பின்வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் வந்து சென்றார்.

