பெதாய் புயல் கோதாவரியில் கரை கடந்தது

பெதாய் புயல் கோதாவரியில் கரை கடந்தது

1 mins read

சென்னை: கஜா புயலைத் தொடர்ந்து தமிழக மக்களை மிரட்டி வந்த பெதாய் புயல் ஒரு வழியாக நேற்று கரையைக் கடந்ததை அடுத்து தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் கோதா வரி அருகில் பெதாய் புயல் நேற்று கரையைக் கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசி யது. இந்த பலத்த காற்றின் கார ணமாக ஒருவர் உயிரிழந்ததாக வும் தகவல்கள் கூறுகின்றன. ஆந்திர கடலோர மாவட்டங் களில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து நேற்று மதியம் பெதாய் புயல் பலத்த காற்றுடன் கோதாவரி மாவட் டத்தில் கரை யைக் கடந்தது. பல்வேறு இடங் களிலும் புயல், மழை காரண மாக மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. அதனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின் றன. புயல் காற்றுடன் பல்வேறு பகுதிகளிலும் கனமழையும் பெய்துவருகிறது. இதன் காரணமாக இன்று வடக்கு ஆந்திரா, ஒடிசா, தெற்கு சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் மிதமான, பலத்த மழை பெய்யும் என்று இந் திய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.