சென்னை: சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் திருமகளுக்கு (படம்) பிணை வழங்கி கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த புன்னை வனநாதர் சிலை காணாமல் போனதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின்போது புன்னை வனநாதர் கற்சிலை மாற்றப்பட்டு, அதற்குப்பதிலாக வேறு ஒரு புதிய சிலை வைக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார். 2018-12-18 06:10:00 +0800
கைதான திருமகளுக்கு பிணை
1 mins read
-

