சென்னை: சிலர் தினமும் சோறு சாப்பிடுவது போல தங்களது நோய்களைக் கட்டுக்குள் கொண்டுவர மருந்துகளை சாப் பிடும் நிலை உள்ளது. இதற்காக மருத்துவமனைகள், மருந்தகங் களுக்கு ஏறி இறங்க முடியாத வர்களும் எளிமையாக வேலையை முடிக்க நினைப்பவர்களும் இணையத்தை நாடுகின்றனர். இப்படி இணையத்தில் வாங் கப்படும் மருந்துகளால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இந்தியா முழுவதும் இந்த மருந்து களை விற்பனை செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அதுபோல டெல்லி உயர்நீதி மன்றமும் இணையத்தின் மூலம் மருந்து விற்பனை செய்வதற்குத் தடைவிதித்துள்ளது. இந்நிலையில், இணைய மருந்து விற்பனைத் தடையை நீக் கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தொடர்பில், "இணையத்தின் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கான தடையை நீக்கமுடி யாது," என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுவாக, ஒருவர் மருந்து வாங்கவேண்டும் என்றால் அதற்குரிய மருத்துவரின் மருந்துச் சீட்டு இருந்தால் மட்டுமே மருந்து வழங்கப்பட வேண்டும் என்பது விதி.
இணையத்தில் மருந்துகளை விற்பனை செய்வதற்கு தடை
1 mins read

