சசிகலாவுடன் தினகரன் முக்கிய ஆலோசனை

சசிகலாவுடன் தினகரன் முக்கிய ஆலோசனை

2 mins read

சென்னை: அம்மா மக்கள் முன் னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தின கரன், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். அவருடன் தகுதி நீக் கம் செய்யப்பட்ட 12 எம்எல்ஏக் களும் சசிகலாவை சந்தித்துப் பேச உடன் சென்றிருந்தனர். கடந்த சில தினங்களாகவே அமமுகவில் பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. தேர்தல் செலவுக்கு அதிக அளவில் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டதால்தான் திமுக வில் செந்தில் பாலாஜி இணைந்த தாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் டிடிவி தினகரன் உள்ளிட்ட 12 பேரும் தற்போது சிறையில் சசிகலாவை சந்தித்து வருகின்றனர். எம்எல்ஏ கலைச்செல்வன் உள்ளிட்டவர்கள் இந்தச் சந்திப்பில் இடம்பெற் றுள்ளனர்.

அமமுகவில் ஏற்பட்டுள்ள சிக்கல், கட்சியை வலுப்படுத்த மேற்கொள்ளப் போகும் நடவடிக் கைகள், வரப்போகும் தேர்தலில் சேரவுள்ள கூட்டணி உள்ளிட்ட வைகள் குறித்து சசிகலாவிடம் 12 பேரும் ஆலோசனைகளை மேற்கொள்வார்கள் என்று கூறப் படுகிறது. பெங்களூருவில் அவர் செய்தி யாளர்களிடம் பேசியபோது, "என் வளர்ச்சியைப் பார்த்து ஆளும் கட்சியினர் மட்டுமின்றி எதிர்க் கட்சியினரும் பயப்படுகிறார்கள். சிலர் விலகி விடுவதால் கட்சி போய்விடும் என்றால் உலகத்தில் எந்தக் கட்சியும் இருக்காது. "கடந்த ஆறு மாதமாக சசிகலாவை யாரும் சந்திக்க வில்லை, அதனால் பார்க்க வந் தோம். "எல்லோரும் சசிகலாவை பார்க்க ஆசைப்பட்டோம் அத னால் பார்க்க வந்தோம். அமமுக வின் வளர்ச்சியையோ என் னுடைய விஸ்வரூபத்தையோ யாராலும் தடுக்கமுடியாது. தின மும் 1,000 பேர் சென்றுவிட் டார்கள், 2,000 பேர் சென்று விட் டார்கள் என்று கூறுகிறார்கள். எல்லாம் பச்சைப் பொய். "எங்கள் கட்சியில் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள். எங்களை யாராலும் அசைக்கமுடியாது," என்று கூறியுள்ளார் தினகரன்.