கோலாலம்பூர்: மலேசியாவில் கோயில் அர்ச்சகர்களாக பணிபுரிய முதல் கட்டமாக 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் ஏற்பாடு செய்தது என்று 'மக்கள் ஓசை' தெரிவித்ததாக 'த ஸ்டார் ஆன்லைன்' குறிப்பிட்டது. பினாங்கு இந்து தர்ம மாமன்றத்தின் ஒத்துழைப்புடன் செபெராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத்தின் இந்து கல்விப் பிரிவு இப்பயிற்சியை நடத்தியது. கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், பாஹாங், ஜோகூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பூசை செய்வது உட்பட இந்து பாரம்பரிய முறைகள் பயிற்சியில் கற்றுத் தரப்பட்டன.
கோயில் அர்ச்சகர் பயிற்சி
1 mins read

