தீயணைப்பாளர் அதிப் மரணம் தொடர்பில் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்படவேண்டும்

தீயணைப்பாளர் அதிப் மரணம் தொடர்பில் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்படவேண்டும்

1 mins read
0caa9ab0-bd02-4b3d-9a2a-c9af3e81ce77
-

அலோர் செட்டர்: சிலாங்கூர் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தாக்கப்பட்ட மலேசிய தீயணைப்பாளர் முகம்மது அதிப் கசிம் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் உயிரிழந் ததைத் தொடர்ந்து பி.வேதமூர்த்தி, எம்.குலசேகரன், கோபிந்த் சிங் டியோ, டாக்டர் சேவியர் ஜெயகுமார் ஆகிய அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்படவேண்டும் என்று அம்னோ யூத் கோரியுள்ளது. நேற்று திரு அதிப்பின் இறுதிச் சடங்கு பிற்பகல் 1.45 மணியளவில் கெடாவில் நடந்தது. குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ஆகியோருடன் பொதுமக்களும் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

இதற்கிடையில் பல ஊகங் களைக் கிளப்பிவிட்டுள்ள திரு அதிப்பின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதற்கு முன் னுரிமை அளிக்கப்படவேண்டும் என்றும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துல் கோரியுள்ளார். திரு அதிப்பின் மரணம் தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு, சமூகநலன் ஆகியவற்றின் அமைச் சர் பி.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று பல சமூக அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன.

(இடமிருந்து) அமைச்சர்கள் பி.வேதமூர்த்தி, எம். குலசேகரன், கோபிந்த் சிங் டியோ, டாக்டர் சேவியர் ஜெயகுமார் ஆகியோர் மீது கோவில் கலவரத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் அதிப்பின் மரணம் தொடர்பில் குற்றம் சாட்டப்படவேண்டும் என்று அம்னோ யூத் கோரியுள்ளது. படம்: த ஸ்டார்