சென்னை: பிளாஸ்டிக் பொருட் களுக்குத் தடை விதிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கு களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், நாளை மறுநாள் அந்த வழக்குகளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக் கவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி அறிவித்தது. பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்யவும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன் பாட்டினை ஊக்குவிக்கவும் இந்த அரசாணை வெளியானது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் இந்தத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்கக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு, புதுவை பிளாஸ்டிக் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
1 mins read

