தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை யைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் இரண்டு மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளாதாகக் கூறப்படுகிறது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்த ரவை எதிர்த்து ஒரு மனுவும் தமிழக அரசின் மனுவை விசாரிக் கும் அதிகாரம் பசுமைத் தீர்ப்பாயத் துக்கு இல்லை எனக்கூறி உத்தரவிடக் கோரி மற்றொரு மனுவுமாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்வதற்காக, தமிழக அரசின் வழக்கறிஞர்கள் மும்முர மாகப் பணியாற்றி வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. மனுக் கள் இவ்வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், தங்களது கருத்தை அறியாமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக்கூடாது எனக் கூறி வேதாந்தா சார்பில் கேவியட் மனு நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என அவ்வட்டார மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மாநில அரசுக்கு உத்தரவிடும் அளவிற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அவ்வளவு வலிமை பெற்ற அமைப்பா என்று கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான், ஆலையை திறக்கக் கூடாதென போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

