ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கான காரணம்

ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கான காரணம்

2 mins read
d12dc104-f21d-4003-833c-bfe0f2c7c260
-

சென்னை: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித் தது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித் துள்ளார். திமுக முன்னாள் தலைவர் அமரர் கருணாநிதி யின் சிலை திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் மொழிகிறேன். ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சி தருக," என்று கூறினார். இந்தப் பேச்சு வடமாநிலங் களில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியதுடன் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்தக் கருத்தில் இணக்கம் இல்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், தம் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார் ஸ்டாலின். அதில், "மத்தியிலே நடை பெறும் ஆட்சியை வீழ்த்த ராகுல் காந்தியை முன்னிறுத்தி, அவரது கரங்களை நாம் வலுப் படுத்த வேண்டும்.

இந்தியா வின் பொருளாதாரத்தை நாச மடையச் செய்து, சமய நல்லி ணக்கத்தைச் சிதைத்து, இந்தியாவின் பன்முகத் தன்மை யையும் ஒருமைப்பாட்டையும் அழிக் கும் மோடி அரசை வீழ்த்த வேண் டும்," என்று அக்கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். "தமிழ்நாட்டை ஒட்டுமொத்த மாக வஞ்சிக்கும் மோடி அரசை வீழ்த்திட வலிமையான நபர் தேவை. பாஜகவின் கோட்டையாக இருந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமையக் கார ணமாக இருந்த ராகுல் காந்தியை முன்னிறுத்துவதுதான் கூட்ட ணிக்குப் பலமாக இருக்கும் என்ற அடிப்படையிலே அவரின் பெயரை உரக்கச் சொன்னேன்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் ராகுல் காந்தியுடன் திமுக தலைவர் ஸ்டாலின். படம்: இந்திய ஊடகம்