சிறையில் வாடும் எழுவரில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க முடிவு

சிறையில் வாடும் எழுவரில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க முடிவு

1 mins read

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ரவிச்சந்திரன் உட்பட எழுவர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களில் சிலர் பரோல் கோரி விண்ணப்பம் செய்தனர். அண்மையில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. மகளின் திருமணத்திற்காக நளினி பரோலில் சென்று வர அனுமதி கோரினார். ஆனால் அது மறுக்கப்பட்டது. இந்நிலையில், ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், முறைப்படி பரோல் மனு கோரி ரவிச்சந்திரன் விண்ணப்பித்தால் அவருக்கு 10 நாட்கள் பரோல் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.