மாநிலம் முழுவதும் 'பேனர்' வைக்க நீதிமன்றம் தடை

மாநிலம் முழுவதும் 'பேனர்' வைக்க நீதிமன்றம் தடை

1 mins read

சென்னை: தமிழகம் முழுவதும் சாலைகளில் பேனர் வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் பேனருக்கு தடை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கின் விசா ரணை நேற்று நடைபெற்றபோது சாலைகளில் பேனர் வைக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக பேனர் வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி கள் அரசியல் கட்சிகள் உள் ளிட்ட எந்த அமைப்பும் இனி பேனர் வைக்கக்கூடாது என் றும் தெரிவித்தனர். பேனர் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றுவோம் என அரசு உறுதியளிக்க வேண்டும் என் றும் அவர்கள் உத்தரவிட்டனர்.