சென்னை: தமிழகத்தில் அங்கீ கரிக்கப்படாத புறம்போக்கு நிலங் களில் வசிக்கும் நான்கு லட்சம் பேருக்கு மூன்று செண்ட் நிலம் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் அங்கீகரிக் கப்படாத வீட்டு மனைகளில் வீடு கட்டி வசிப்பவர்கள் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.
"திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 4 லட் சத்து 5 ஆயிரம் மக்கள் புறம் போக்கு நிலங்களில் வசித்து வரு கின்றனர். இந்தப் புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் வசித்து வரும் மக்கள் வெளியேறி வேறு இடங் களில் வசிக்க தமிழக அரசு ஒவ் வொருவருக்கும் 3 செண்ட் நிலம் வழங்க முடிவு செய்துள்ளது. "இந்தத் திட்டம் ஆறு மாதங் களில் முடிக்கப்படும் என்றும் ஆண்டு வருமானம் ஒரு லட் சத்திற்குக் குறைவாக உள்ள வர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.