எச்.ராஜா: தமிழக மக்களால் பாஜக ஆட்சிக்கு வரவில்லை

1 mins read

சென்னை: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயலால் பெரும் சேதத்தை சந்தித்தன. புயலால் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி சந்திக்கவில்லை என்ற குறை நிலவுகிறது. இந்நிலையில் கோவையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க பிரதமர் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், நேரடியாக பதிலளிக்காமல் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தியை திமுக அழைத்தது குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், "காங்கிரஸ் ஆட்சி சரி இல்லை என்பதால்தானே பாஜகவுக்கு வாய்ப்பு அளித்தார்கள், உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் கூறுங்கள்," எனக் கேட்டார். அதற்கு உடனடியாக ஆத்திரப்பட்ட எச்.ராஜா, "தமிழக மக்கள் வாக்களித்து பாஜக ஆட்சிக்கு வரவில்லை," எனப் பதிலளித்தார்.