மதுரை: கஜா புயலில் இறந்தோருக்கு நிவாரணம் வழங்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளை மத்திய குழு தனது இறுதி அறிக்கையை எப்போது சமர்ப்பிக்கும்? என்று கேள்வி எழுப்பி இருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதி கேசவலு ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் முன் னிலையான வழக்கறிஞர், "மத் திய குழு தனது இறுதி அறிக் கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக தமிழக அரசிடம் சில விளக்கங்கள் கேட்டு இருந்தது. "அதன்படி அவர்கள் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே மேலும் கூடுதல் விவரங்கள் கேட்க முடிவு செய் யப்பட்டுள்ளது.
விவரம் கிடைத்த சில நாட்களில் மத்திய குழு தனது இறுதி அறிக்கையை தாக் கல் செய்யும். அதன் அடிப் படையில் மத்திய தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் செய லாளர் தலைமையில் விவாதிக்கப் பட்டு இரண்டு வாரங்களில் கஜா புயல் நிவாரணம் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும்," என தெரிவித்தார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், "மத்திய அரசு கேட்ட கூடுதல் விவரங்கள் கடந்த 16ஆம் தேதியே கொடுக்கப்பட்டு விட் டன," என்றார்.
இந்நிலையில் நேற்று இவ் வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், கஜா புயல் நிவாரண நிதியை மத்திய அரசு, தமிழக அரசுக்குத் தரமறுக்கிறது என்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் போது மான அளவு நிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு தரவில்லை என்றும் கூறி னார். "மாநில அரசு போதிய விளக் கங்களைத் தர தவறியதால் நிவா ரணம் வழங்க காலதாமதம் ஆகிறது. இறுதி அறிக்கை அடிப் படையிலேயே தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரண நிதி அளிக்க முடியும்," என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

