ராம்நாத்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டு மாதங்களில் திறக்கப்படும்

1 mins read

சென்னை: செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத், "அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்ட பிறகே பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் சார்பில் நூறு கோடி ரூபாய் மதிப்பில் சமூக நலத்திட்டங்களை வழங்க முடிவு செய்துள்ளோம்," என்றார்.