சென்னை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நிய மிக்கப்பட்டுள்ள பொன்.மாணிக்க வேலுவுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் புகார் அளித்துள் ளனர். இது குறித்துப் பேசிய அவர், யாரும் இல்லாமல் தனியாக என் னால் பணியாற்ற முடியும், கடைசி மூச்சு வரை என் பணியை செய் வேன். என் மீது நம்பிக்கை வையுங்கள்," என்று கூறியுள்ளார். கடத்தப்பட்ட சிலைகளை நிர்வகித்து இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திடம் சேர்ந்து செயல்படுவதற்காக அவருக்கு 5 டிஎஸ்பி, 5 ஏடிஎஸ்பி, 17 ஆய் வாளர்கள், 47 துணை ஆய்வாளர் களை நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள 333 சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க 2017 ஜூலை 21ஆம் தேதி இந்த காவல் படை நிய மிக்கப்பட்டது.
இதற்கிடையே பேசிய பொன். மாணிக்கவேல், "எனக்கு எதிராக புகார் கொடுத்தவர்கள் கடந்த 400 நாட்களில் எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்த தாக எப்படி கூறுகிறார்கள்," என்று கேள்வி எழுப்பினார். புகார்களுக்குப் பின்னணியில் யாரோ செயல்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதற்கிடையே பொன்.மாணிக்க வேலுவுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்த விவகாரத்தில் தலையிட உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதி பதிகள் ஆர்.மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் முன்னி லையாகி சிலை கடத்தல் பொன். மாணிக்கவேலுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் டிஜிபி யிடம் புகார் அளித்துள்ளதை நீதி பதிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இதற்குப் பதிலளித்த நீதி பதிகள், "முறையான ஆவண ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதற்கான ஆதாரங்களைத் தாக் கல் செய்தால், அதனை நீதிமன்றம் பரிசீலிக்கும்," என்று தெரிவித் தனர். பின்னர் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் முத்திரை யிடப்பட்ட உறையில் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மற்றொரு நிலவரத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், "பொன். மாணிக்கவேல் நேர்மையானவர் என்று யார் சொன்னது," என்று கேட்டார்.
"பொன்.மாணிக்கவேல் இது வரை எத்தனை சிலைகளைக் கண்டுபிடித்துள்ளார், எத்தனை பேரை கைது செய்துள்ளார் என் பதைத் தெரிவிக்க வேண்டும். பொன். மாணிக்கவேல் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு யாரோ ஒரு வரின் கைப்பாவையாக செயல்படு கிறார்," என்று அமைச்சர் சி.வி. சண்முகம் சொன்னார்.
சிலை கடத்தல் சம்பவங்களில் உயர்மட்ட பிரமுகர்கள் சம்பந்தப் பட்டிருப்பதால் பொன்.மாணிக்க வேலுவுக்கு தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாரும் இல்லாமல் ஒற்றை ஆளாக போராடுவேன் என்று பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார். கோப்புப் படம்: இந்திய ஊடகம்

