பரங்கிமலை: ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 19 பெண் அதிகாரிகளுக்கு சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டிலிருந்து ஆப் கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சியளித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆப்கானிஸ் தானைச் சேர்ந்த 19 பெண் அதிகாரிகள் கடந்த மாதம் 26ஆம் தேதி சென்னை வந்தனர். இம்மாதம் 26ஆம் தேதி வரை சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் அவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
இந்திய ராணுவத்தின் பயிற்சி குறித்துப் பேசிய ஆப்கானிஸ்தான் ராணுவ கேப்டன் சிராஜுல் ஹக் சபி, "இந்தப் பயிற்சி மையத்தில் இதுவரை எங்கள் நாட்டைச் சேர்ந்த 20 பெண் ராணுவ அதி காரிகள் பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது 19 பெண்கள் பயிற்சி பெறுகின்றனர். ஆப்கானிஸ் தானில் தலிபான்களின் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில் பெண்கள் பொதுத்துறை பணி களுக்கு வருகின்றனர். குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் அதிக அளவில் சேருகின்றனர்," என்றார். ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் கேப்டன் தேஜசுஸ்மிதா, "போர் பயிற்சிகள், துப்பாக்கியால் சுடுவது, ஆயுதங்களைக் கையாள் வது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவர் களுக்கு ஆங்கிலம் தெரியாத தால் அவர்களின் மொழியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர் களுக்கு ஆங்கிலம் பேசவும் கற்றுத் தரப்படுகிறது," என்றார். இந்தியாவில் 4 ஆயிரத்துக் கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2018-12-21 06:00:00 +0800

