தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிளாஸ்டிக் பயன்பாடு: விதிமீறலுக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை

1 mins read

சென்னை: தமிழகத்தில் வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கான தடை அமலுக்கு வருகிறது. ஆனால் தடையை மீறு வோருக்கு தண்டனை விவரங் களை அரசு இன்னும் அறிவிக்க வில்லை. இதனால் பிளாஸ்டிக் தடையை எப்படி அமலாக்குவது என்பது தெரியாமல் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் குழப்பத்தில் மிதக்கின்றனர். 2015ல் மத்திய மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் ஆண்டு தோறும் 205,724 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகிறது என்றும் அதை நிர்வகிப்பதற்கான செயல்திட்டத்தைத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப் பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 2011ஆம் ஆண்டு நிலவரப்படி தினமும் 4,500 டன் குப்பைகள் உருவாகுவதாகவும் அதில் 425 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்ப தாகவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தவும் வைத்திருக்கவும் உற் பத்தி செய்யவும் தடை விதித்து கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தத் தடை ஜன வரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்தத் தடை குறித்தும் பிளாஸ் டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்தும் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டு வருகிறது.