'அழகில் மயங்கியதால் ஆறாண்டுச் சிறைத் தண்டனை'

'அழகில் மயங்கியதால் ஆறாண்டுச் சிறைத் தண்டனை'

2 mins read
fcb99459-7e23-4754-9e4c-856b14531430
-

மும்பை: "ஒரு தவறும் செய்யா மல் பாகிஸ் தானில் நான் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக் கப்பட்டேன். "எனக்கு ஏற்பட்ட மோசமான அனு பவங் களுக்கு முழுப் பொறுப் பும் நானே. ஃபேஸ்புக் மூலம் பழகிய ஒரு பெண் ணின் அழ கில் மயங்கி, பாகிஸ்தானுக் குச் சென் றதே நான் செய்த தவறு. "சிறையில் அடைக் கப்பட்ட பிறகுதான் நான் எவ் வ ளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண் டேன் என்பது தெரியவந் தது. ஆனால் தவற்றை உணர்ந்து நான் கதறி அழுதும் பயனில்லை. "என்னை விடுவிப்பதற்கு பாடு பட்ட இந்திய அதிகாரிகள், உற வினர்கள் மற்றும் என் தாய் ஆகியோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். நான் செய்த தவற் றையும் எனக் காக குரல் கொடுத் தவர் களின் உண்மை அன் பை யும் புரிந்துகொண்டேன்," எனக் கூறினார்.

மும்பையைச் சேர்ந்த ஹமித் நிஹல் அன்சாரி (33), தனது ஃபேஸ்புக் காதலியைப் பார்ப்பதற் காக கடந்த 2012ல் ஆப்கானிஸ் தான் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் பாகிஸ்தான் ராணு வத்தினரால் கைது செய்யப் பட்டார். பாகிஸ்தானில் உளவு பார்க்கிறார் எனக் குற்றம் சாட்டப் பட்டது. மூன்று ஆண்டு கள் விசார ணைக் கைதியாக இருந்த அன்சாரிக்கு 2015 டிசம்பர் 15ஆம் தேதி ராணுவ நீதி மன்றம் 3 ஆண்டு கள் சிறைத் தண்டனை விதித்தது. பாகிஸ்தா னின் பெஷா வர் மத்திய சிறையில் இருந்து கடந்த வாரம் விடுதலை யான அவர், தொலைக்காட்சி ஒன்றுக்கு இவ்வாறு உருக்கமாகப் பேட்டி யளித்தார்.

பாகிஸ்தானில் ஆறாண்டுகள் சிறையில் கழித்து விடுதலையான ஹமித் நிஹல் அன்சாரி, மும்பையில் தன் குடும்பத்தினருடன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். படம்: ஊடகம்