நடிகர் விஷால் கைது

நடிகர் விஷால் கைது

2 mins read
524907dd-256b-4db4-a21c-8c72cb092ebe
-

தென்னிந்திய நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்- களில் ஒரு குழுவினர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்- துக்கு நேற்று முன்தினம் பூட்டுப் போட்டிருந்த நிலையில், அதனை உடைத்த விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். நடிகர் விஷால் தமிழ்த் திரைப்- படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலா ளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு எதி- ராக தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி தூக்கத் தொடங்கினர். பொதுக்குழுவைக் கூட்டவில்லை, வைப்புத் தொகை- யில் முறைகேடு, அளித்திருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட- வில்லை, திரைப்பட வெளியீட்டில் பாரபட்சம், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்குச் சங்கப் பொதுக்குழு- வைக் கூட்டாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டது உட்பட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதில் தயாரிப்பாளர்கள் ஏ.எல். அழகப்பன், டி.சிவா, எஸ்.ராதா கிருஷ்ணன், எஸ்.வி.சேகர், நந்த- கோபால், மைக்கல் ராயப்பன், தனஞ்செயன் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் ஒன்றுதிரண்டனர். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள சங்கத்தின் அலுவல- கத்துக்கு அவர்கள் பூட்டுப் போட் டனர்.

மூத்த இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து விஷால் மீதான குற்றச்சாட்டு- களைக் கூற முயற்சி செய்தனர். அவர்களுக்கு நேற்று காலை அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் பாரதிராஜா தலைமை யிலான தயாரிப்பாளர்கள், திரைப் படச் சங்கங்களில் நிலவும் பிரச்சி னைகளைச் சமாளிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்போவதாக கூறப்படு கிறது. இந்நிலையில் விஷாலும் அவ- ருக்கு ஆதரவான தயாரிப்பாளர்கள் நேற்று காலை தி.நகர் காவல் நிலையம் அருகே திரண்டனர். அப்போது அவர்களுக்கும் போலிசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தயாரிப்- பாளர் சங்கத்துக்கு போடப்பட்டு இருந்த பூட்டை உடைக்க முயன்ற விஷாலையும் அவரது ஆதரவாளர்- களையும் போலிசார் கைது செய்தனர்.