புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான பிரபஞ்சன் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 73. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1945ஆம் ஆண்டு பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தை கல்லூரியில் சேர்ந்து தமிழ்ப் புலவர் பட்டம் பெற்ற பிரபஞ்சன், தஞ்சாவூரில் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், ஒருகட்டத்தில் அந்தப் பணியை விட்டு விலகி முழு நேர எழுத்தாளரானார். 1995ஆம் ஆண்டு பிரபஞ்சனின் வரலாற்றுப் புதினமான 'வானம் வசப்படும்' என்ற புத்தகத்திற்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த பிரபஞ்சனின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்
1 mins read

