'நம்ம உணவக' உரிமையாளர் ரூ.1 கோடியை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டதாகப் புகார்

'நம்ம உணவக' உரிமையாளர் ரூ.1 கோடியை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டதாகப் புகார்

1 mins read

சென்னை: 'நம்ம உணவகம்' என்ற பெயரில் கிளைகளைத் தொடங்கி சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துவிட்ட தாக அதன் உரிமையாளர்கள் மீது பங்குதாரர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத் தில் புகார் அளித்துள்ளனர். ஹோட்டல் தொழிலில் சிரம மான காரியம் சமையல்தான். ஆனால் இப்படி சிரமப்பட்டு சமைக்காமலேயே சமைத்த உணவுகளை வாங்கி விற்பனை செய்யும் வகையில் உணவுகளைத் தயாரித்துக் கொடுத்து வந்தது 'நம்ம உணவகம்'.

அரும்பாக்கத்தைச் சேர்ந்த காசிம் என்பவர் 'நம்ம உணவகம்' என்ற பெயரில் சமைக்காத ஹோட்டல் நடத்த சில மாதங் களுக்கு முன்பு சென்னை முழு வதும் விளம்பரப்படுத்தினார். இதனை நம்பி லட்சக்கணக்கில் பலரும் பணம் செலுத்தி நம்ம உணவக உறுப்பினர்களாகினர். தவிர 'விற்ற பணத்தில் 30% உங்களுக்கு, 70% எங்களுக்கு' என்ற வார்த்தைகளைத்தான் பலரும் தற்போது கூறி புலம்புகின் றனர். நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனும் ரூ.10 லட்சம் செலுத்தி கேகே நகரில் 'நம்ம உணவகம்' நடத்த உரிமம் பெற்றிருந்தார்.