புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தேநீர் கடைக்காரர் ஒருவர், கஜா புயலால் பாதிப்புக்கு உள்ளான விவசாயி களின் கடன் பாக்கிகளை முழு வதுமாகத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். இதனை அனை வரும் அறிந்துகொள்ளும் விதமாக தேநீர் கடை அறிவிப்புப் பலகையில் நோட்டீசும் ஒட்டியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்க ளின் மனதை நெகிழச் செய் துள்ளது. டீக்கடை உரிமையாளர் சிவக்குமாரைப் பாராட்டி தற் போது தமிழகம் முழுவதும் இருந்தும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பேரிழப்பை ஏற்படுத்தி யுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுடன் சேர்ந்து பல தன்னார்வலர்களும் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வம்பன் கிராமத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரர் சிவக் குமார், புயலால் பாதித்த மக்க ளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தவர், இதையடுத்து தனது டீக்கடை யில் நீண்ட நாட்களாக பாக்கி வைத்திருந்த விவசாயிகளுக்கு மட்டுமின்றி வாடிக்கையாளர் களின் கடனையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்து இதனை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக டீக்கடை ஓரம் பலகையில் நோட்டீசாகவும் ஒட்டினார்.
கடந்த 8 ஆண்டுகளாக வம்பன் கிராமத்தில் தேநீர்கடை நடத்தி வரும் சிவக்குமார் அனைவரது தேநீர் கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளார். படம்: ஊடகம்

