சென்னை: மனித உயிருக்கு அடிப் படை ஆதாரமாக விளங்கும் விலைமதிப்பில்லாத தண்ணீரின்றி எந்த ஒரு காரியமும் ஆகாது. வரும் 2019ல் இந்த தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் இதனால் சென்னை மாநகர் வாழ் மக்கள் அவதிப்படும் நிலை உரு வாகும் என்றும் முன்எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை இந் தாண்டு எதிர்பார்த்த அளவிற்கு பெய்யாத காரணத்தால் சென்னை யில் வரும் பிப்ரவரி மாதம் முதல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப் பிருப்பதாக குடிநீர் பகிர்மான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்தாண்டு கோடைக்காலத்தில் குடிநீர்த் தட் டுப்பாட்டால் சென்னைக்கு காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள், ஆழ்துளைக் கிணறு களில் இருந்து தண்ணீர் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். வடகிழக்குப் பருவமழையால் தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதி களுக்கு மழை கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு சராசரி அளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில் இதுவரை எதிர் பார்த்த அளவு மழையில்லை. சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூண்டி, புழல், சோழ வரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளில் உள்ள தண்ணீர் பூர்த்தி செய்துவருகிறது.
சென்னையில் தண்ணீர் லாரிகள் மூலம் தருவிக்கப்படும் நீரைப் பிடித்துச் செல்லும் மக்கள். படம்: ஊடகம்

