அனைத்து கணினிகளையும் கண்காணிக்கும் இந்திய அரசு

அனைத்து கணினிகளையும் கண்காணிக்கும் இந்திய அரசு

2 mins read

இந்தியாவில் உள்ள எந்த ஒரு கணினியையும் கண்காணிக்க ஏதுவாக பத்து முக்கிய அரசாங்க அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. உளவுத்துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய்ப் புலனாய்வுத் துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), தேசிய புலனாய்வுப் பிரிவு, டெல்லி போலிஸ் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட பத்து அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சின் இணைய, தகவல் பாதுகாப்புப் பிரிவு அந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது. "அந்தப் பத்து அமைப்புகளுக்குத் தேவைப் படும் நேரத்தில் தகவல் தொடர்பு சேவை வழங்குவோர் அல்லது கணினிப் பயன் பாட்டாளர் அல்லது கணினி மையத்தின் பொறுப்பாளர் உதவ வேண்டும். அந்த அமைப் புகள் கேட்கும் தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை அவர்கள் வழங்கவேண்டும். இணங்க மறுப்போருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்," என்று மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் கௌபா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மை, தற்காப்பு, மாநிலங்கள், பொது ஒழுங்கு ஆகியவற்றைப் பாதுகாக்கவும் வெளிநாடுகளுடனான நட்புறவைப் பேணுவதற்காகவும் அந்தப் பத்து அமைப்புகளுக்கும் இந்த அதிகாரம் வழங்கப் படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தேவைப்பட்டால் உளவுத்துறை யால் நேரடியாகக் கணினியைக் கைப்பற்றவும் முடியும் எனச் சொல்லப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. "இந்தியர்கள் ஒவ்வொருவரையும் ஏன் குற்றவாளிகள்போல் நடத்துகின்றனர்? ஒவ் வொரு குடிமகனையும் உளவுபார்க்கும் இந்தச் செயல் சட்டவிரோதமானது. இது அந்தரங்கம், ஆதார் தொடர்பான தீர்ப்புகளை மீறுவதாக உள்ளது," என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.