இந்தியத் தூதரக அதிகாரிகள் பாகிஸ்தானில் அவதி

இந்தியத் தூதரக அதிகாரிகள் பாகிஸ்தானில் அவதி

1 mins read

பாகிஸ்தான் அரசாங்கம் தங்களை மோசமாக நடத்தி வருவதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் மீண்டும் புலம்பத் தொடங்கியுள்ளனர். அவர்களில் பலரது வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வசதிகள் இன்னும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படு கிறது. திடீர் திடீரென மின்சாரத்தைத் துண்டிப்பது, இணையச் சேவையை நிறுத்துவது எனப் பல இன்னல்களை அவர்கள் எதிர்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. இதையடுத்து, இந்த விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவுத் துறையிடம் இந்திய வெளியுறவு அமைச்சு கொண்டு சென்றுள்ளதாக அறியப்படுகிறது. இந்தியத் தூதரக அதிகாரிகளின் வீடுகளுக்குச் செல்லும் விருந்தாளி களும் பல சிக்கல்களை எதிர்கொள் வதாகச் சொல்லப்படுகிறது. பாகிஸ் தான் அதிகாரிகள் அவர்களிடம் பாது காப்புச் சோதனைகள் என்ற பெயரில் கடுமையாக நடந்துகொள்வதாகத் தெரி விக்கப்பட்டது. அதோடு, இந்தியத் தூதரக அதி காரிகள் மீதான கண்காணிப்பும் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் கூறு கின்றன.