அமெரிக்கர்களை மிரட்டிய கும்பல் சிக்கியது

அமெரிக்கர்களை மிரட்டிய கும்பல் சிக்கியது

1 mins read
1d88d3cf-1a32-46d3-bf0c-9ade6e45bf4e
-

நொய்டா: போலி 'கால் சென்டர்' நடத்தி அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையில் போலி கால் சென்டரில் பணி யாற்றிய மொத்தம் 126 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் நொய் டாவில் உள்ள 63வது செக்டார் பகுதியில் இயங்கி வந்த கால் சென்டரில் சில மோசடி செயல்கள் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வியாழன் இரவு அங்கு சென்ற காவல்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் போலி கால் சென்டரில் பணியாற்றிய 126 ஊழியர்களை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அமெரிக் காவில் உள்ள அமெரிக்கர்களை தொலைபேசியில் அழைத்து மிரட்டி பணம் பறிப்பது தெரிய வந்தது. அமெரிக்கர்களுக்கு அடை யாள அட்டை எண் போன்று ஒன்பது இலக்க சமூக பாதுகாப்பு எண் வழங்கப்பட்டுள்ளது.

அந்த எண்ணில் பிரச்சினை இருப்பதாகக் கூறி அதனை சரி செய்வதாகத் தெரிவித்து போலி கால் சென்டர் ஊழியர்கள் பணம் பறித்த விவரம் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 126 பேரும் கைது செய்யப்படுவதாக காவல்துறை யினர் அறிவித்தனர். நொய்டாவில் கடந்த சில மாதங்களில் 12க்கும் மேற்பட்ட போலி கால் சென்டர்கள் கண்டு பிடிக்கப்பட்டு பல ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலி 'கால் சென்டர்' ஊழியர்களை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். படம்: இந்திய ஊடகம்