ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை மூண்டது. பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களை அவர்கள் கைப் பற்றியுள்ளனர். இருப்பினும் சண்டை ஓயவில்லை. அப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கோப்புப் படம்: இந்திய ஊடகம்

