கணினி திரை, சிமெண்ட் 'ஜிஎஸ்டி' வரி குறைப்பு

கணினி திரை, சிமெண்ட் 'ஜிஎஸ்டி' வரி குறைப்பு

1 mins read

புதுடெல்லி: 'ஜிஎஸ்டி' மன்றத் தின் 31வது கூட்டம் புதுடெல்லி யில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக் குமாரும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பது என முடிவு செய்யப் பட்டது. இவற்றில் ஏழு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 2 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக குறைக்க ஜிஎஸ்டி மன்றம் முடிவு செய்தது. எஞ்சிய 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்கப்படுகிறது. இதன்படி தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு பொருட்கள், கணினி திரை, தொலைக்காட்சி திரைகள், டயர்கள், லித்தியம்- அயன் பேட்டரிகள், சிமெண்ட், சினிமா டிக்கெட்டுகள் ஆகிய வற்றுக்கான ஜிஎஸ்டி வரி குறைகிறது. பின்னர் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, "உச்சபட்ச 28% ஜிஎஸ்டி வரி பிரிவில் 34 ஆடம்பர பொருட்களே உள்ளன" என்றார்.