கடல் நீர்மட்டம் 2.8 அடி வரை உயரும் அபாயம்

கடல் நீர்மட்டம் 2.8 அடி வரை உயரும் அபாயம்

1 mins read

புதுடெல்லி: பூமி வெப்ப மடைவதால் இந்திய கடற்கரை பகுதிகளில் கடலின் நீர்மட்டம் 3.4 அங்குலம் அளவு உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் 34 அங்குலங்கள், அதாவது 2.8 அடி வரை உயரும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது. ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள ஆய்வு விவரங்களை மத்திய அமைச்சர் வெளியிட் டார். "மும்பை, மேற்கு கடற்கரை போன்ற பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. குஜராத்தில் கட்ஜ், கொங்கன், தெற்கு கேரளா பகுதிகள் கடல்மட்ட உயர்வுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதி களாகும்," என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.