நடிகர் விஷால் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை: சாடுகிறார் குஷ்பு

நடிகர் விஷால் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை: சாடுகிறார் குஷ்பு

2 mins read

சென்னை: திரைப்பட நடிகர் விஷால் குறித்துக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என காங் கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித் துள்ளார். தமிழகத் திரைப்படத் தயாரிப் பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போடப்பட்டதை ஏற்க இய லாது என்று கோவையில் செய்தி யாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். "விஷால் மீது எதிரணியினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி உள்ளனர். எனினும் விஷாலுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் உயர் நீதிமன்றம் மூலம் வெற்றி கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை எப்படி நுழைந்தது?" என்று குஷ்பு கேள்வி எழுப்பினார். தற்போது உள்ள விவகாரத் துக்காக முதல்வரை அணுகவேண் டிய அவசியமில்லை என்று குறிப் பிட்ட அவர், விஷாலின் எதிரணி யில் இருப்பவர்களில் ஒருவர் பாஜக, மற்றொருவர் அதிமுக என்பதால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது போல் சில சம்பவங்கள் நடந்துள்ளன என்றார்.

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் ஸ்டா லின் முன்மொழிந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கணினிகளைக் கண்காணிக்கலாம் என மத்திய அரசு கூறியிருப்பது உச்ச நீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் குஷ்பு தெரிவித்தார். "நடிகை பிரியங்கா சோப்ரா வின் திருமணத்துக்குச் சென்ற பிரதமருக்கு விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை. அதிமுக அரசு விவசாயிகளுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. "தானே ராஜா தானே மந்திரி என்பது போல் பிரதமர் நடந்து கொள்கிறார். வெளிநாட்டில் அதிகமாக இருப்பதால் அவரை வெளிநாட்டு வாழ் இந்தியப் பிரதமர் என்றுதான் சொல்ல வேண்டும்," என்றார் குஷ்பு.