நாஞ்சில் சம்பத்: மத்திய அரசின் ஜனநாயகப் படுகொலை

நாஞ்சில் சம்பத்: மத்திய அரசின் ஜனநாயகப் படுகொலை

1 mins read

சென்னை: கணினிகளைக் கண்காணிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வரும் சட்டம் ஜனநாயகப் படுகொலை என மூத்த அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியை நாட்டு மக்கள் விரட்டி யடிக்க வேண்டும் என்றார். தமிழக பாஜக தலைவி தமிழிசை, அக்கட்சியின் தேசிய செயலர் எச். ராஜா ஆகிய இருவரும் நெஞ்சில் நஞ்சை வைத்துப் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இருவரும் தேவை யற்ற சுமைகள் என விமர்சித்தார். "மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை யில் உள்ள 40 தொகுதி களிலும் போட்டியிடும் என்று கமல்ஹாசன் கூறி உள்ளார்.

தானும் போட்டி யிடப் போவதாகக் கூறி இருப்பது அவரது தனித் தன்மையைக் காட்டுகிறது. "அதேசமயம் இன்னும் கட்சி தொடங்கவில்லை என்பதால் டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிடச் செல்லவில்லை என்று கூறிய ரஜினியின் சுயரூபத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். மதிமுகவிலும், பின்னர் அதிமுகவிலும் இணைந்து செயல்பட்ட நாஞ்சில் சம்பத் தற்போது எந்தக் கட்சியிலும் இல்லை. இலக்கிய, அரசியல் பேச்சாளராக மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்று வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.