கொட்டும் மழையில் வடம்பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்

1 mins read
ecb624b1-c39e-4aa6-8729-f37b02e95f48
-

சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி மாத ஆருத்ரா திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கொட்டும் மழையில் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நேற்று காலை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. அதிகாலை சித்சபை யில் இருந்து சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்தி, விநாயகர், முருகர், சண்டி கேஸ்வரி ஆகிய சுவாமிகள் மேள தாளம் முழங்க, தேவாரம், திருவாசகம் ஓதிட அலங் கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். பக்தர்கள் 'சிவ சிவ' முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேருக்கு முன்பாக ஏராளமான பெண்கள் மாக்கோலமிட்டனர். படம்: தகவல் ஊடகம்