தினமும் 200 வீடுகளுக்கு பால் விநியோகிக்கும் மேயர்

தினமும் 200 வீடுகளுக்கு பால் விநியோகிக்கும் மேயர்

2 mins read
146b4984-5aee-4356-8e8f-599cb8717a29
-

அதிகாலை 4.30 மணி முதல் சொந்தத் தொழிலிலும் மேயர் பதவியி லும் பம்பரம்போல் இயங்கும் அஜிதா விஜயன். படம்: இந்திய -ஊடகம்

திரிச்சூர்: மேயர் பதவியில் அமர்ந்தபோதிலும் பழைய தொழிலை மறக்காமல் செய்து வரும் அஜிதா விஜயனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின் றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அஜிதா, 47, கடந்த வாரம் புதன்கிழமை திரிச்சூர் மாநகராட்சி மேய ராகப் பதவி ஏற்றார். கணிமங் களம் வார்டில் வெற்றிபெற் றதைத் தொடர்ந்து அவர் மேய ராக அறிவிக்கப்பட்டிருந்தார். கடந்த 1999ஆம் ஆண்டு முதல் அக்கட்சியில் இருந்து வரும் அஜிதா, 2005ஆம் ஆண்டு முதன்முதலாக கவுன் சிலராக வெற்றி பெற்றார். பின் னர் 2010ஆம் ஆண்டு அர சாங்க நிலைக்குழு உறுப்பின ரானார். பதவிகள் ஒருபுறம் வந்து கொண்டு இருந்தாலும் வீடு வீடாகச் சென்று பால் பாக்கெட் விநியோகம் செய்யும் தொழிலை அவர் ஒருபோதும் நிறுத்தியது இல்லை. கடந்த வாரம் மேயர் பதவி ஏற்றபோதும் பால் விநியோகத்தைக் கைவிடமாட்டேன் என உறுதிபடக் கூறினார் அந்தப் பெண்.

மாநில அரசின் 'மில்மா' பால் நிலையத்தின் கடை ஒன்றை 22 ஆண்டுகளாக நடத்திவரும் தமது கணவர் விஜயனுக்கு உதவியாக இருந்து வரும் அஜிதா ஒவ்வொரு நாளும் 200 வீடுகளுக்கு பால் பாக்கெட்டை விநியோகம் செய் கிறார். இதற்காக காலை 4.30 மணிக்கே எழுந்துவிடுவதாகக் கூறும் அவர், பால் விநியோகம் முடிந்ததும் காலை 9.30 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் சென்று மேயர் இருக்கையில் அமர்வதாகக் குறிப்பிட்டார். மேயர் பதவி ஏற்ற மறுநாளான வியாழக்கிழமை காலையில் வழக் கம்போல தமது இருசக்கர வாக னத்தில் கிளம்பி பால் பாக்கெட் விநியோகிக்கச் சென்ற அஜிதாவை அவ்வட்டார மக்கள் ஆச்சரியத் துடன் பார்த்தனர்.