‘நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஜிஎஸ்டி குறைப்பு’

புதுடெல்லி: சரக்கு, சேவை வரி என்றழைக்கப்படும் ஜிஎஸ்டியை குறைத்த செயலுக்கு அரசியல் நோக்கம் இருப்பதாக எதிர்த்தரப் பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் 33 பொருட் களுக்கு வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் ஏழு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 28 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக குறைக் கப்படுகிறது. மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12 விழுக்காடு முதல் 5 விழுக்காடு வரை குறைக்க அறிவிப்புகள் வெளியாகின. இந்த வரிகுறைப்பு நடவடிக் கைக்குப் பரவலான வரவேற்பு இருந்தபோதிலும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கொதித்துப் போய் குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக, கேரள நிதி அமைச் சர் தாமஸ் ஐசக் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார். "லாட்டரி சீட்டுகளின் வரியை 12 விழுக்காட்டில் இருந்து 28 விழுக்காட்டுக்கு உயர்த்தி கேரளா வில் வரிவிதிப்பை அதிகப்படுத் தலாம் என்று அருண் ஜெட்லி கணக்குப் போட்டார்.

"ஆனால் கேரளாவைத் தவிர வெளிமாநிலங்களுக்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவ தில்லை. இதனால் லாட்டரி விற் கும் கும்பல்களுக்குத்தான் பெரிய நஷ்டம்," என்று கூறி தாமஸ் ஐசக் தமது டுவிட்டர் செய்தியில் குறிப் பிட்டுள்ளார். மோடியின் இரட்டை மனப்பாங் கினையும் போலித்தன்மை யையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த ஜிஎஸ்டி வரிகுறைப்பு அமைந்துள்ள தாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங்சுர்ஜிவாலா கூறியுள்ளார். சினிமா டிக்கெட் மீதான வரி குறைக்கப்பட்டதற்கு திரைப்படத் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமி ழிசை சௌந்தரராஜன், ஜிஎஸ்டி யில் மாற்றம் கொண்டுவந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறியுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி குறைப்புக்காக பிரதமர் மோடியைப் புகழ்ந்துள்ளார். "மொத்தமாகவே 34 ஆடம்பரப் பொருட்கள் மட்டுமே இனி 28 விழுக்காட்டு வரியில் இருக்கும். மற்ற எல்லாப் பொருட்களும் 18 விழுக்காடு மற்றும் அதற்குக் குறைவான வரிக்குள் அடங்கி விடும். நிதி அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு நன்றி," என்று அவர் டுவீட் செய்துள்ளார். நடிகர் அக்ஷய் குமார், சினிமா டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி குறைக் கப்பட்டதற்காக மோடிக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் தங்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண் டதற்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!