குடும்ப வன்முறை: பத்து நாட்களில் 10,000 புகார்கள்

குடும்ப வன்முறை: பத்து நாட்களில் 10,000 புகார்கள்

1 mins read

சென்னை: பெண்கள் பாதுகாப்புக் காக மத்திய அரசு அறிமுகப் படுத்திய 181 இலவச தொலை பேசிச் சேவை கடந்த 10ஆம் தேதி தமிழகத்துக்கு விரிவுபடுத் தப்பட்டது. மையம் தொடங்கப் பட்ட முதல் நாளில், 5,000 புகார் கள் வந்தன. அதற்கு அடுத்த நாட்களில் இருந்து தினமும் 600 முதல் 700 வரையிலான அழைப்புகள் வருகின்றன. இம் மாதம் 20ஆம் தேதி வரை 10 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் மூலம் புகார்கள் செய்யப்பட்டு உள்ளன. கணவன் மது அருந்திவிட்டு அடிப்பது, குழந்தைகள், மனை வியுடன் கணவர் நேரம் ஒதுக்கு வதில்லை, பெற்றோரை மகன் அல்லது மகள் கவனிப்பதில்லை உட்பட குடும்ப வன்முறையால் தாங்கள் சந்திக்கும் பாதிப்பு களை அதிக அளவில் பெண்கள் தெரிவித்து வருகின்றனர்.