தமிழகம் எதிர்த்தால் மேகதாது அணை இல்லை: மத்திய அரசு

தமிழகம் எதிர்த்தால் மேகதாது அணை இல்லை: மத்திய அரசு

1 mins read

சென்னை: தமிழக அரசின் அனு மதி இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசால் முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் புதிதாக மேக தாது அணையை ரூ.5,912 கேடி செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப்பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற வும் 400 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர் நாடகா முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரு கிறது. நாடாளுமன்றத்திலும் மேகதாது அணை விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத் தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளையும் சேர்ந்த அதிமுக, திமுக உறுப் பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் நிதின் கட்காரி இதனைக் குறிப் பிட்டுள்ளார். அவரது இந்த உறுதிமொழி தமிழக விவசாயிகள் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.