மக்கள் ஆதரவைத் திரட்ட கிராம சபைக் கூட்டங்கள்: திமுக முடிவு

மக்கள் ஆதரவைத் திரட்ட கிராம சபைக் கூட்டங்கள்: திமுக முடிவு

2 mins read

சென்னை: அண்ணா அறி வாலயத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 40 நாடாளுமன்றத் தொகுதி களின் 'பூத் கமிட்டி' நிர்வாகிகளும் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கஜா புயல் பாதிப் புக்கு நிவாரணம் வழங்க வேண் டும் என்றும் கர்நாடக அரசு மேக தாது அணை கட்டுவது தொடர் பான திட்ட அறிக்கை தயாரிப் பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண் டும் எனவும் கூட்டத்தில் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

"மேகதாது விவகாரத்தில் எந்த வித அழுத்தத்திற்கும் தமிழக அரசு அடிபணிந்துவிடக்கூடாது. விவசாயிகளின் கடன்களைத் தமி ழக அரசு ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி ஜனவரி 3ஆம் தேதி முதல் ஊராட்சிகளில் மீண் டும் ஒருமுறை கிராமசபைக் கூட் டங்கள் நடத்தி மக்களைச் சந் தித்துப் பேச உள்ளோம். "திமுக மட்டுமின்றி திமுகவின் தோழமைக் கட்சிகளும் இக்கூட் டங்களில் பங்கேற்கும்," என்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் நடை பெறுவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று கிராம சபைக் கூட்டங்களில் பங் கேற்றார். மக்களோடு மக்களாக அமர்ந்து பேசி அவர்களின் அடிப்படைக் குறைகளை அறிந்து வந்தார். மேலும் அந்தந்தப் பகுதி பிரச் சினைகளைக் கேட்டறிந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத் தது. அதனால்தான் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.