தமிழிசைக்கும் திருநாவுக்கரசருக்கும் நெருக்கடி முற்றுகிறது

தமிழிசைக்கும் திருநாவுக்கரசருக்கும் நெருக்கடி முற்றுகிறது

2 mins read
19ab16cd-8eec-4b88-b304-86ee0150c00c
-

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மிகவும் அதிருப்தியில் இருப்பதாகவும் கட்சிப் பணிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு அமெரிக்காவுக்குப் பறந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவுக்கு எதிரான மனநிலை யில்தான் திருநாவுக்கரசர் செயல் படுவார் என பரவலாக ஒரு பேச்சு உள்ளது. திமுக தலைமையைவிட தினகரனுடன்தான் அவருக்கு நெருக்கம் அதிகம் என்றும் கூறப் படுகிறது. கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு முன்பு வரை டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே திருநாவுக் கரசரின் நோக்கமாக இருந்தது. இதையடுத்துதான் ராகுல் - கமல் சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய் தார்.

மேலும் தொடர்ந்து அமமுகவு டன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் அவர். அதனால் அதி ருப்தி அடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது குறித்து நேரடியாகவே ராகுலுடன் பேசி இருக்கிறார். அப்போதே திருநாவுக்கரசர் மீது கடுப்பான ராகுல் காந்தி அவரை பதவி யிலிருந்து அகற்ற நினைத்தார். ஆனாலும் பொறுமை காத்தார். ஆனால், தற்போது திருநாவுக் கரசரைத் தூக்க வேண்டும் என்ற திமுகவின் நெருக்கடிக்கு ராகுல் பணிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருணாநிதி சிலை திறப்புவிழா முடிந்த கையோடு திருநாவுக் கரசரை டெல்லிக்கு அழைத்த ராகுல் அவரிடம் கடுமையாகக் கடிந்துகொண்டதோடு பதவி வில கல் கடிதத்தையும் பெற்றுக்கொண் டார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசர், ஸ்டாலினிடம் சர ணடைந்துள்ளார். ஆனால் திமுக தலைமையோ அவரைக் கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில்தான் ஓய்வு எடுப் பதாகக் கூறிவிட்டு திருநாவுக்கரசர் அமெரிக்கா சென்றுவிட்டார். ஜன வரி மாத இறுதியில்தான் அவர் தமிழகம் திரும்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரும்பி வருவதற்குள் அவரது பதவி பறிக்கப்படும் என தெரி கிறது.

ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர்.