159 நாட்களில் உலகம் சுற்றிய சைக்கிள் வீராங்கனை

1 mins read
762c6a55-d64f-476d-9b1b-2f8b99d28794
-

புனே: சைக்கிள் மூலம் 159 நாட்களில் உலகை வலம் வந்த 20 வயது வேதாங்கி குல்கர்னிக்குப் பாராட்டுகள் குவிகின்றன. சைக்கிளில் உலகை மிகக் குறைந்த நாட்களில் வலம் வந்த ஆசியப் பெண் எனும் பெருமைக்கு புனேயைச் சேர்ந்த அவர் சொந்தக் காரராகக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பம் கூடிய விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதற்குத் தேவையான ஆவணங்கள் சேகரிக்கப்படுவ தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவு தெரிவதற்கு எட்டிலிருந்து ஒன்பது மாதங்கள் ஆகலாம். ஆனால் அதற்காக தாம் பொறுமையுடன் காத்திருக்கத் தயாராக இருப்பதாக வேதாங்கி கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து வேதாங்கி தமது சாதனைப் பயணத்தைத் தொடங்கினார். சாதனை படைக்க அவர் 29,000 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்ய வேண்டும். அதன்படி அவர் 29,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தமது பயணத்தை கோல்கத்தாவில் முடித்துக் கொண்டார். பயணத்தின்போது பல சவால்களை அவர் சந்தித்தபோதும் தமது இலக்கை அவர் கைவிட வில்லை. ஒருமுறை அவரிடம் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த பொருட்களைத் திருடினார். அதுமட்டுமல்லாது, வனப்பகுதி கள் வழியாக சைக்கிளை ஓட்டிச் சென்றபோது வன விலங்குகளால் ஆபத்து ஏற்படும் சாத்தியம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. காட்டுத் தீயையும் கண்டு அஞ்சாமல் பயணத்தைத் தொடர்ந் துள்ளார் வேதாங்கி.

சவால்களைக் கண்டு அஞ்சாமல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த வேதாங்கி குல்கர்னி. படம்: வேதாங்கி குல்கர்னி