இம்ரான் கான் கருத்துக்கு இந்திய அமைச்சர்கள் கண்டனம்

இம்ரான் கான் கருத்துக்கு இந்திய அமைச்சர்கள் கண்டனம்

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது சமய ரீதியான வெறுப்பு அதிகரித்து வருவதாகவும் போலிசாரின் உயிரைவிட பசுக்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அண்மையில் இந்தித் திரைப்பட நடிகர் நசிருதீன் ஷா கருத்து தெரிவித்திருந்தார். இதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் சிறுபான்மை இனத்தவரைப் பற்றி பேசியுள்ளார். "நரேந்திர மோடி அரசு சிறுபான்மை இனத்தவரை எப்படி நடத்துகிறது என்பதை இது காட்டுகிறது" என்று நசிருதீன் ஷா கூறியதை அவர் சுட்டினார். இம்ரான் கானின் இந்தக் கருத்துக்கு இந்தியாவின் மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர்கள் நல்ல நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மாறாக, பாகிஸ்தானில்தான் சிறுபான்மை இனத்தவர்கள் துன்பத்துக்கு ஆளாவதாக அவர்கள் கூறினர்.