பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை: ராணுவ உயர் அதிகாரி குற்றவாளி

1 mins read

கவுகாத்தி: இந்தியப் பெண் ராணுவ அதிகாரி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக உயர் ராணுவ அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், ராணுவம் நடத்திய வழக்கு விசாரணைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட அந்த உயர் அதிகாரி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாகாலந்தில் உள்ள அசாம் ரைஃபிள்ஸ் ராணுவப் பிரிவுக்குக் கடந்த 2016ஆம் ஆண்டு உயர் அதிகாரியாக மேஜர் ஜெனரல் எம்.எஸ். ஜஸ்வான் நியமிக்கப்பட்டார். இவர், கேப்டன் பதவியில் இருந்த பெண் அதிகாரி ஒருவரை தமது அறைக்கு அழைத்து அவரிடம் தவறாக நடந்துகொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜஸ்வானைப் பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.