திருவள்ளூர்: பெண்ணின் ஃபேஸ் புக் காதல் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் பெற்ற தாயையே கொன்றுள்ளார் மகள் ஒருவர். தாயைக் கொன்ற மகள், ஆந் திராவில் தலைமறைவாக இருந்த பெண்ணின் காதலன், காதலனின் நண்பர்கள் இருவர் ஆகிய அனை வரையும் திருவள்ளூர் காவல் துறையினர் நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். திருவள்ளூரை அடுத்த காக்க ளூர் ஆஞ்சநேயபுரத்தைச் சேர்ந்த வர் திருமுருகநாதன். இவரது மனைவி பானுமதி, 50. இவர்களுக்குச் சாமுண்டீஸ் வரி, தேவிபிரியா என்ற இரு மகள் கள் உள்ளனர். தேவி பிரியா, 19, பி.காம் படித்துவந்தார்.
இந்நிலையில் தேவிபிரியா கும்பகோணத்தை அடுத்த திரு விடைமருதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 24, என்ற இளைஞருடன் ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளார். மைசூரில் வேலை செய்து வரும் சுரேசும், தேவி பிரியாவும் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்கா மலேயே கடந்த இரண்டு ஆண்டு களாக காதலித்து வந்துள்ளனர்.

