சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புத்திசாலித்தனத்துடன் அணுகுவதற்கு ஏற்ப தமிழக அரசியல் களத்தில் நாளும் பரபரப்பான சூழல் நிலவி வரு கிறது. ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி வரை கட்சிகள் பலவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியைத் துடைத்தொழிக்க கங் கணம் கட்டிவரும் திமுக, காங் கிரசுடன் கூட்டு சேர்ந்துள்ள நிலையில், அந்தக் கட்சிகளுடனான பலப்பரிட்சைக்கு தன்னை தயார்ப்படுத்தி வருகிறது அதிமுக. இச்சமயத்தில் பாஜகவை தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு அதிமுகவின் தலைமை நம்பகமான மூத்த அமைச்சர்களை டெல் லிக்கு அனுப்பிவைத்துள்ளது.
தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அருண்ஜெட்லியைச் சந்தித்து கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் முதல் கட்ட ஆலோசனை நடத்துவதற் காக டெல்லிக்கு விரைந்துள்ளனர். இந்த சந்திப்புக்குப்பின், இந்த இரு விஷயங்களிலும் சாதகமான பலன் கிட்டும் என ஆளும் அதி முக தரப்பு திடமாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. தேசிய அளவில் தனித்து நின்று ஆட்சியைப் பிடிக்கமுடியாது என்பதையும் பாஜகவை தனியாக வீழ்த்தமுடியாது என்பதையும் நன் றாக அறிந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், மாநில கட்சிகளை அரவணைத்து, வலுவான கூட்டணியைக் கட்டமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

